Kathir News
Begin typing your search above and press return to search.

1,135 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையா... தமிழக கல்வி தரம் எங்கே போகிறது?

தமிழகத்தில் 1135 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி திறப்பு நடைபெறப் போகிறதா?

1,135 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லையா... தமிழக கல்வி தரம் எங்கே போகிறது?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Jun 2023 4:40 AM GMT

தமிழகத்தில் தற்போது 700 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமலே இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 1135 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமலேயே பள்ளி திறப்பு ஜூன் 7ஆம் தேதி நிகழ இருக்கிறது. அதிர்ச்சியில் ஏற்படுத்தியிருக்கிறதாக ஆசிரியர் சங்கம் வேதனை தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கல்வித் தரம் எத்தகைய நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது புலப்படவில்லை.


கோடை விடுமுறை முடிந்து வருகிற 7 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக பள்ளிக்கல்வி துறையும், தமிழக அரசும் பல்வேறு விளம்பரங்களையும், அறிவிப்புகளையும் வெளியிடுவது வெறும் விளம்பரத்திற்காகவா என்ற ஒரு கேள்வியும் எழப்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் பதவி என்பது முக்கியமான ஒரு பதவியாக பார்க்கப்படுகிறது.


அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்க இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான இரண்டு ஆண்டு கால பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாமல் தற்போது வரை இருக்கிறது. தமிழக அரசு இது குறித்து காலம் தாழ்த்துவதாகவும் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறது.

Input & Image courtesy: News J

Next Story
கதிர் தொகுப்பு
Trending News