Kathir News
Begin typing your search above and press return to search.

124வது மலர் கண்காட்சி.. நாற்று நடும் பணியை துவக்கி வைத்த நீலகிரி ஆட்சியர்.!

124வது மலர் கண்காட்சி.. நாற்று நடும் பணியை துவக்கி வைத்த நீலகிரி ஆட்சியர்.!

124வது மலர் கண்காட்சி.. நாற்று நடும் பணியை துவக்கி வைத்த நீலகிரி ஆட்சியர்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Dec 2020 9:51 AM GMT

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 2021ம் ஆண்டுக்கான 124வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மலர் நாற்றுகளை நடும் பணியை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் மக்களின் வாழ்வதாரமே சுற்றுலா பயணிகளை சார்ந்தே உள்ளனர். அது போன்றவர்களை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு வருடமும் அரசு சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படும். அந்த சமயத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுப்பார்கள்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியராக உள்ள இன்னசென்ட் திவ்யா மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக அமைவதற்கு பல்வேறு வகையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி நீலகிரி மாவட்ட மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதன் பின்னர் தமிழக அரசு பல்வேறு வகையான தளர்வுகளுடன் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதற்கு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு செல்வது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்ற வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவை அலங்கரிக்க 25000 வகையான வண்ண மலர் செடிகள் நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மற்றும் ஜப்பான் அமெரிக்க ஜெர்மன் நெதர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து 290 வகையான விதைகள் வரவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிருந்து பெறப்பட்ட மலர்செடிகளை உற்பத்தி செய்யப்பட்டு தாவரவியல் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் சுமார் 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. 2021ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News