Kathir News
Begin typing your search above and press return to search.

12ம் வகுப்பு தேர்வு ரத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 90 சதவீதம் இணையவழி வகுப்புகள் மற்றும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்தது, முறையாக படித்த மாணவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் முடிவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

12ம் வகுப்பு தேர்வு ரத்திற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 3:49 PM IST

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து உயர்க்கல்வி சேர்க்கைக்கு மதிப்பெண் கணக்கீடு குறித்தும் முடிவு செய்வதற்கு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அந்த மனுவில், கல்வியாண்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் குறிப்பிட்ட அளவில் மட்டுமே நடந்துள்ளது. எனவே காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.





மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளில் 90 சதவீதம் இணையவழி வகுப்புகள் மற்றும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், பொதுத்தேர்வைத் தமிழக அரசு ரத்து செய்தது, முறையாக படித்த மாணவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்தும் முடிவாகும் என குறிப்பிட்டுள்ளார்.





இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதில், இதில் இடைக்காலத் தடை விதிக்க எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகின்ற 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News