12ம் வகுப்பு தனித்தேர்வு எழுதுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதில் திருப்தி இல்லாதர்வர்களும், தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.

By : Thangavelu
12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. இதில் திருப்தி இல்லாதர்வர்களும், தனித்தேர்வர்களுக்கும் ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.
இது பற்றி அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2020 முதல் 2021ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு படித்த மாணவர்கள் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக இருப்பவர்கள், இன்று முதல் 27ம் தேதி முதல் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாக 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
அனைத்து பாடத்தேர்வகளுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பாடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க கூடாது. தற்போது தேர்வு எழுதி வெளியிடப்படும் மதிப்பெண் இறுதியானது. மேலும், 12ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறியவர்கள் மற்றும் தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் துணைத் தேர்வு எழுதுவதற்கு சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அப்படி 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்கள் 28ம் தேதி அன்று ஆன்லைனில் ரூ.1000 செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு துணைத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 6,9,11,13,16,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
