140 கிலோ குட்கா பொருளுடன் சிக்கிய திமுக கவுன்சிலர்!
By : Sushmitha
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள திமுக கவுன்சிலர் சிவசங்கர். இவர் வெற்றிலை, சீவல் போன்ற பொருட்களை மொத்தமாகவும் சில்லறைய விற்பனையும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மன்னார்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஆவி கோட்டையை சேர்ந்த சேகர் என்பவர் இருசக்கர வாகனத்தில் சந்தேகம் ஏற்படுத்தக்கூடிய மூட்டை ஒன்றை ஏற்றி சென்றுள்ளார். பிறகு அதனை சோதனை இட்ட காவல்துறையினர் குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் மூட்டையில் இருந்துள்ளது.
இதனால் சேகரிடம் விசாரணை செய்த போலீசார் அவர் சிவசங்கரிடம் இருந்துதான் குட்கா பொருட்களை வாங்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து திமுக கவுன்சிலரான சிவசங்கர் வீட்டை ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் 140 கிலோ குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களும் அதனை விற்பனை செய்தால் கிடைத்த ரூபாய் 4 லட்சம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட குட்கா பொருள்களின் மதிப்பு என்பது ஒரு லட்சத்து 37 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் கணக்கிட்டுள்ளனர். மேலும் திமுக கவுன்சிலர் சிவசங்கர் மற்றும் சேகர் இருவரையும் விசாரணை செய்வதற்காக மன்னார்குடி கிளை சிறையில் போலீசார் கைது செய்து அடைத்தனர்.
Source : Junior Vikatan