153 போலி எல்இடி டிவி.. கடை உரிமையாளர் நிஜாமுதீன், முகமது பைசல் அதிரடி கைது.. திருச்சியில் பயங்கரம்.!
153 போலி எல்இடி டிவி.. கடை உரிமையாளர் நிஜாமுதீன், முகமது பைசல் அதிரடி கைது.. திருச்சியில் பயங்கரம்.!
By : Kathir Webdesk
சோனி, சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலி எல்.இடி. டிவிக்கள் விற்பனை செய்த எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் ஒரு வர் கைது செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பீமா நகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிக வளாகத்தில் திருச்சி எலக்ட்ரானிக்ஸ் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், தீபாவளி பண்டிகையொட்டி முன்னணி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த கடையில் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் சோனி நிறுவனத்தின் 32 இன்ச் எல்இடி வாங்கியுள்ளார். வீட்டில் டிவியை பொருத்திய சவுகத் அலி அதை ஆன் செய்ய முயன்றுள்ளார். ஆனால் டிவி ஆன் ஆகவில்லை.
இதனை தொடர்ந்து சவுக்கத் அலி டிவி வாங்கிய கடைக்கு சென்று அதன் உரிமையாளர் நிஜாமுதீனிடம் புகார் கூறியுள்ளார். ஆனால் உரிமையாளர் நிஜாமுதீன் புகாரை பொருட்படுத்தவில்லை என்று தெரிகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த சவுகத் அலி, சோனி சர்வீஸ் சென்டருக்கு சென்று தான் வாங்கிய புதிய டிவியை சோதனை செய்துள்ளார்.
அப்போது அந்த டிவி போலியானது என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சவுகத் அலி, இது பற்றி பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் உள்ள அனைத்து டிவிக்களும் போலியானது தெரியவந்துள்ளது.
இதுவரை கடை உரிமையாளர் நிஜாமுதீன் போலியான பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு விற்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் நிஜாமுதீன், விற்பனையாளர்கள் முகமது பைசல், சரவணன் ஆகியோர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். 153 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி அன்று வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களுக்கு காட்டுத்தீ போன்று பரவியுள்ளது.