வாக்காளராக சேர்வதற்கு மேலும் 2 லட்சம் விண்ணப்பம்.. தலைமை தேர்தல் அதிகாரி.!
வாக்காளராக சேர்வதற்கு மேலும் 2 லட்சம் விண்ணப்பம்.. தலைமை தேர்தல் அதிகாரி.!
By : Kathir Webdesk
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு வகையிலான பணிகளை செய்து முடித்துள்ளது. முதற்கட்டமாக வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், விலாசம் மாற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது. இதன்பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலை கடந்த மாதம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் தேதியை இறுதி செய்யும் வகையில், மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகளை, தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித் அவர், இறுதி வாக்களார் பட்டியல் வெளியிட்ட பின்னர், வாக்காளர் பட்டியலில் இணைவதற்கு மேலும் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அது மட்டுமின்றி மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளை அதிகரிக்கப்படும் என்று கூறினார்.