Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக வரலாற்றிலேயே +2 தேர்வு முடிவுகளை வெளியிட தாமதமாகிய ஒரே அரசு தி.மு.க: வெளுத்து வாங்கிய SG. சூர்யா!

தமிழக வரலாற்றிலேயே பிளஸ் டூ தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஆக்கிய ஒரே அரசு தி.மு.க.

தமிழக வரலாற்றிலேயே +2 தேர்வு முடிவுகளை வெளியிட தாமதமாகிய ஒரே அரசு தி.மு.க: வெளுத்து வாங்கிய SG. சூர்யா!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 May 2023 2:03 AM GMT

தமிழகத்தில் இன்று பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் விஷயம் என்னவென்றால் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் தான். இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் SG. சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது பற்றிய அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது பற்றி அவருக்கு கூறுகையில், "தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தற்போது மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளாக தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தமிழக கல்வித்துறை அமைச்சர் வருகைக்காக தேர்வு முடிவுகள் வெளியிடாமல் சுமார் 8.51 லட்சம் மாணவ, மாணவிகள் காத்திருந்த அவலம் நடந்து இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் இன்று மே எட்டாம் தேதி காலை 9:30 மணி அளவில் வெளியாக்கும் என்று கூறப்படுகிறது, ஆனால் 9:45 ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப் படவில்லை.



குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டு முடித்து தருவாயில் தமிழக வரலாற்றிலேயே பிளஸ் டூ தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் தாமதப்படுத்திய ஒரே அரசு இந்த திமுக அரசு தான் என்று கோப்பையை தட்டி சென்று இருக்கிறார். முழு நேர உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும், பகுதி நேர தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அறிஞர் அண்ணா நூலகத்திற்கு வருகை தர தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. சுமார் 8.51 லட்சம் பிளஸ் டூ மாணவர் மாணவர்கள் மாணவிகள் இன்று காலை 9:30 மணியில் இருந்து தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுகளுக்காக காக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமைச்சர் திருச்சியில் இருந்து விமானத்தில் வருகை தர தாமதமானதாக கூறுகிறார்கள் மாணவர்களின் கனவுகளுடன் அவர்கள் விளையாடுகிறார்கள்.


மாணவர்களின் மீது அக்கறை இருந்தால் முன்கூட்டியே திட்டமிட்டு சரியான நேரத்தில் அமைச்சர் வந்து இருப்பார், அந்த பொறுப்புணர்வையும் கடமையையும் கிஞ்சித்தும் இல்லாததால் அமைச்சர் தாமதமாக வந்துள்ளார். இந்த திமுக ஆட்சியின் கையாளாகாத தனத்தையும் நிர்வாக திறமையின்மையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தயவுசெய்து உங்கள் அற்ப அரசியலுக்காக மாணவர்களின் கனவுகளுடன் விளையாட வேண்டாம் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். தமிழகத்தின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவர்கள் சினம் கொண்டால், அதை தாங்கும் திராணி உங்களுக்கு உங்கள் அரசுக்கு கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News