2 ஆயிரம் சிறப்பு பேருந்து இயக்க முடிவு.. களைகட்டும் தீபாவளி.!
2 ஆயிரம் சிறப்பு பேருந்து இயக்க முடிவு.. களைகட்டும் தீபாவளி.!
By : Kathir Webdesk
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று 2 ஆயிரம் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதில், சென்னையில் இருந்து 1,705 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 1,807 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு வசதியாக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் நேற்று முதல் 13ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் நேற்று முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல துவங்கியுள்ளனர். வழக்கமாக 2,000 பேருந்துகள்தான் இயக்கப்படும். ஆனால் நேற்று மட்டும் 1,346 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
சிறப்பு பேருந்துகளை பொறுத்தவரை 5 பேருந்துகள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன. இந்த பேருந்துகளில் 54,040 பயணிகள் பயணித்துள்ளனர். அதேபோன்று, இன்று 2,000 பேருந்துகளை இயக்க திட்டம் இருக்கிறது. சென்னையில் இருந்து 1,705 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 1,807 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பண்டிகை தினமான நாளை மறுநாள் 2,000 தினசரி பேருந்துகளும், சென்னையில் இருந்து 1,580 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களில் இருந்து 2,540 பேருந்துகளும் இயக்கவும் போக்குவரத்துத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.