பப்ஜி மதனை ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு.!
மதனை பிடிப்பதற்கு போலீசார் தீவிரம் காட்டிய நிலையில், தலைமறைவானார். இதனை தொடர்ந்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில், தருமபுரியில் பதுங்கியிருந்த மதனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

By : Thangavelu
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சொல்லிக் கொடுப்பது போன்று ஆபாசமாக பேசி அதனை யூடியூபில் வீடியோ வெளியிட்டு வந்தவர்தான் பப்ஜி மதன். இவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் 150க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது.
இதனையடுத்து மதனை பிடிப்பதற்கு போலீசார் தீவிரம் காட்டிய நிலையில், தலைமறைவானார். இதனை தொடர்ந்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில், தருமபுரியில் பதுங்கியிருந்த மதனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதன் நேற்று சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு பப்ஜி மதன் பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். 2 சொகுசு கார்கள் மற்றும் வீடு வாங்கியது தெரியவந்தது.
மேலும், பப்ஜி மதனுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்கில் ரூ.4 கோடி வரை இருந்தது தெரியவந்தநிலையில், அதனை முடக்கினர்.
இந்நிலையில், பப்ஜி மதனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது மதன் லேப்டாப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர்.
அதில் ஆபாசமாக பேசியது உறுதிசெய்யப்பட்ட நீதிபதிகள், வருகின்ற ஜூலை 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவுபிறப்பித்தனர். இதனை தொடர்ந்து பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
