முக்கிய தலைவர்களைக் கொல்ல சதி திட்டம் - NIA அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்!
முக்கிய அதிகாரிகளை கொலை செய்வதற்கு சதி திட்டம் NIA அதிகாரிகள் விசாரணையில் பரபரப்பு தகவல்.
By : Bharathi Latha
சேலம் மாவட்டம் ஓமத்தூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சேலம் செவ்வாய் பேட்டை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் சக்கரவர்த்தி அர்ஜுரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் செட்டிசாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து யூடியுப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டனர் இதில் கைது ஆனவர்களில் இருந்து துப்பாக்கி மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. இதனால் இந்த வழக்கு சேலம் கியூ பிரண்ட்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதை எடுத்து க்யூ பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த படத்தை கடந்த ஜூலை மாதம் தேசிய புலனாய்வு முகமை எடுத்துக் கொண்டது.
அவர்கள் மறு வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினார்கள். இதில் துப்பாக்கிகள் தயாரித்த சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் ஏழாம் நாள் காலையில் எட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சேலத்தில் உள்ள அவர்களது வீடு மற்றும் துப்பாக்கி தயாரித்த சித்துச்சாவடி வாடகை வீடு ஆகியவற்றில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்ப அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் விடுதலைப்புலிகள் தொடர்பான கணினி ஹார்ட் டிஸ்க்கள், புத்தகங்கள், விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படங்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்க பல்வேறு பொருட்களை வாங்கி இருப்பதற்கான ஆவணங்கள், மருந்துகள், அடர்ந்த காட்டிற்குள் வாழ வேண்டிய வாழ வேண்டிய தேவையான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனவே முக்கிய தலைவர்களை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டிய தீத்தியது NIA அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் தமிழகத்தில் வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம். முக்கிய தலைவர்களை கொலை சதித்திட்ட அவர்களை குறி வைத்து துப்பாக்கிகளை வெடிமருந்து தயாரித்து வந்தனர். சேலம், சிவகங்கை நடந்த சோதனைகள் சதித்திட்டம் திருட்டு இதற்கான ஆதாரங்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தோம். இவர்களிடம் தொடர்பு இருந்தவர்கள் குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறினர்.
Input & Image courtesy: Dinamalar