200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் சாமி சிலை உடைப்பு! பின்னணி என்ன?
By : Dhivakar
தென்காசி: குற்றாலம் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சாமி சிலை உடைக்கப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தென்னிந்தியாவில் கடந்த சில மாதங்களாக தொடர் சாமி சிலைகள் உடைப்பு நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. 'மர்ம நபர்கள்' என்று கூறப்படுபவர்களால் சேதப்படுத்தப் படும் சாமி சிலைகளை கண்டு, இந்து சமுதாய மக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக,
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே, இலஞ்சி குமாரர் கோவிலின் பன்றி மாடசாமி கோவில் உள்ளது. இக்கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என்பதால் அவ் வட்டாரத்தில் அக் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாக கருதப்படுகிறது. இந்நிலையில் இக்கோயிலின் சிலையை யாரோ மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மாடசாமி என்ற கோயில் நிர்வாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் இந்து முன்னணியினரும், இப்பிரச்சனை குறித்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.