20 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக வேண்டும்: மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தமிழக அரசு.!
தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுகிறது.

By : Thangavelu
இந்தியாவில் கடந்த ஒரு சில மாதத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பாக 2 லட்சத்தை கடந்து விட்டது. உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதே போன்று தமிழகத்திலும் பாதிப்பு இரட்டிப்பாக உள்ளது. கடந்த மாதம் வரை தினசரி பாதிப்பாக 500 என்ற எண்ணிக்கையில் இருந்த தொற்று தற்போது 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. மருத்துவமனைகளில் இடம் வசதி இல்லாததால் மீண்டும் கல்லூரி மற்றும் பள்ளிகள் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கூடுதல் தடுப்பூசி டோஸ் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் கூடுதலாக தடுப்பூசி தேவைப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியும் கொடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. விரைவில் தடுப்பூசி தமிழகத்திற்கு கூடுதலாக அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி கிடைத்தால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி பற்றாக்குறையின்றி போடப்பட்டுவிடும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
