தி.மு.க. அரசின் அவலம்: அழுகிய முட்டை சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
By : Thangavelu
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் அருகாமையில் அத்தியா நல்லூரில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 100 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 25) பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மதிய உணவுடன் சேர்த்து முட்டை வழங்கப்பட்டது. அப்போது முட்டை அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனை அப்படியே வேகவைத்து மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்தது மட்டுமின்றி மயக்கம் போட்டு கீழே விழுந்தனர்.
இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலை தொடர்ந்து மாணவர்கள் அனைவரையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்ட பெற்றோர்கள் திமுக அரசு மீது குற்றம்சுத்தியுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை தரமானதாக விநியோகம் செய்யக்கூட முடியாதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். திமுக அரசு அமைந்த பின்னர் பொதுமக்கள் நலனில் அக்கரை செலுத்தாமல் கமிஷன் வாங்குவதிலேயே குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இது போன்ற சம்பவம் தொடர்கதையாகவே இருக்கும்.
Source, Image Courtesy: Nakkheeran