Kathir News
Begin typing your search above and press return to search.

2 நாட்கள் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்.!

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்தது.

2 நாட்கள் இறைச்சி கடைகளுக்கு விடுமுறை: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  30 April 2021 4:05 PM IST

தமிழகத்தில் சனிக்கிழமை, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மீன் விற்பனை கடைகள் மூடப்படுவதால், சென்னை காசிமேட்டில் மீன் வாங்குவதற்கு இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்தது. அதன்படி கடந்த 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





இந்நிலையில், நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறைச்சிக்கடைகள் இயங்காது. இதனால் சென்னை காசி மேட்டில் மீன் வாங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றாக கூடியிருந்தனர். தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்காமல், முககவசம் அணியாமலும் பலர் இருந்தனர். ஏற்கெனவே சென்னையில தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

தற்போது இறைச்சி வாங்குவதற்கு மக்கள் குவிந்து வருவது மிகவும் ஆபத்தை விளைவிக்கும் சூழல்தான் உருவாகியுள்ளது. எனவே பொதுமக்கள் அரசு பிறப்பித்த உத்தரவுகளை முறையாக கடைப்பிடித்தால் கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News