Kathir News
Begin typing your search above and press return to search.

3வது அலை பரவலை கட்டுப்படுத்த திட்டம்: அதிகரிக்கும் மக்கள் கூட்டம் அடிக்கும் எச்சரிக்கை மணி!

3வது அலை பரவலை கட்டுப்படுத்த திட்டம்: அதிகரிக்கும் மக்கள் கூட்டம் அடிக்கும் எச்சரிக்கை மணி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  15 July 2021 6:26 PM IST

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடைமுறையில் இருந்த ஊரடங்குகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்பொழுது மக்கள் அதிகமாக ஒரே இடத்தில் பயணம் செய்வதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்ட், பேருந்து நிலையங்கள் போன்ற பல இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணிக்கிறார்கள். எனவே இவற்றின் காரணமாக மூன்றாவது அலை பரவலை கட்டுப்படுத்த கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் உடல் வெப்ப நிலையில் எச்சரிக்கை மணி அடிக்கும், 'ஸ்கேனர்' கருவி பொருத்தி கண்காணிக்கப்படுகிறது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் சேவை, தொற்று குறைவு காரணமாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக தற்போது 40க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுவதால், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வெளிமாநில பயணிகளால் தொற்று அதிகரிப்பதை தவிர்க்கும்படி ஸ்டேஷனில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் சார்பில் தகவல் மையம் அருகே, பயணிகளின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து எச்சரிக்கையூட்டும் 'ஸ்கேனர்' மற்றும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.


பயணிகள் இவ்விரண்டையும் கடக்கும்போது, உடல் வெப்பம் அளவு புகைப்படம் தானாகவே பதிவாகி விடுகிறது. அதை தகவல் மையத்தில் உள்ள 'கம்ப்யூட்டர் மானிட்டர்' வாயிலாக அதிகாரி கண்காணித்து வருகிறார். ஏதேனும் ஒரு பயணிக்கு உயர் வெப்பநிலை பதிவாகும் பட்சத்தில், எச்சரிக்கை ஒலி தானாகவே ஒலிக்க ஆரம்பித்து விடும்.

உடனடியாக பயணி அழைக்கப்பட்டு, பரிசோதனை செய்து சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுவார். பயணி கூட்டத்தில் சென்றாலும், அவரது புகைப்படத்தை வைத்து கண்டறியப் படுகிறார். கோவை வரும் பயணிகள், கட்டாய பரிசோதனை செய்த பிறகே வெளியே அனுமதிக்கப் படுகின்றனர்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News