3.14 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.!
நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் தினமும் அனப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதத்திற்கு 42 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், 3வது அலை வருவதற்குள் அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசிசை போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அதன்படி அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் தினமும் அனப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதத்திற்கு 42 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான தொகுப்பில் இருந்து 3 லட்சத்து 14 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. புனேவில் இருந்து விமானம் மூலமாக தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்தும் தேனாம்பேட்டை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.