Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து விரோத போக்கை தொடரும் தி.மு.க !

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்து விரோத போக்கை தொடரும் தி.மு.க !
X

ThangaveluBy : Thangavelu

  |  29 Sep 2021 1:48 PM GMT

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண் 552, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11-9-2021-ன்படி, 31-10-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக, கொரோனா தொற்று பரவக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31-10-2021 காலை 6 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

மேலும், சமுதாயம், அரசியல், கலாசார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:Indian Panorama


Next Story
கதிர் தொகுப்பு
Trending News