Kathir News
Begin typing your search above and press return to search.

வருசநாட்டில் தேங்கிக்கிடக்கும் 30 லட்சம் தேங்காய்.. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை.!

விவசாயிகளின் நன்மையை கருதி தேங்காய்களுக்கு உரிய விலை நிர்ணம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருசநாட்டில் தேங்கிக்கிடக்கும் 30 லட்சம் தேங்காய்.. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2021 3:14 PM IST

நல்ல மழை காரணமாக தேனி மாவட்டம், வருசநாடு பகுதியில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய்கள் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு தேங்காய், தற்போதைய மூலில் 10 ரூபாய்க்கும் கீழே குறைந்துவிட்டது.


இதனால் வருசநாடு பகுதிகளில் விளைந்த சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான தேங்காய்கள் தேக்கம் அடைந்துள்ளன. தோட்ட பராமரிப்பு மற்றும் தென்னை மரம் ஏறுபவர்களின் கூலிக்குகூட போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

எனவே விவசாயிகளின் நன்மையை கருதி தேங்காய்களுக்கு உரிய விலை நிர்ணம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News