Kathir News
Begin typing your search above and press return to search.

32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா... தூத்துக்குடிக்கு அர்ப்பணித்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்..

32 ஏக்கர் பரப்பளவிலான பல்லுயிர் பூங்காவை தூத்துக்குடிக்கு அர்ப்பணிக்கும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்.

32 ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர் பூங்கா... தூத்துக்குடிக்கு அர்ப்பணித்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  31 May 2023 4:53 AM GMT

தாமிர உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலை சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டும், அதன் 2023 ஆம் ஆண்டிற்கான நோக்கமாக "பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்குதல்’’ என்ற சர்வதேச இலக்கை மெய்ப்பிக்கும் வகையில் "முத்து நகர் பல்லுயிர் பூங்கா” திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியது. இந்த அடிக்கல் நாட்டும் விழாவிற்கு தமிழ் நாட்டின் காடுகளின் மனிதர் என்று அழைக்கப்படும் திரு.சரவணன் தலைமை தாங்கினார்.

இவர் ஏற்கனவே புதுச்சேரிக்கு அருகில் 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றி, பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாற்றியுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு சிலுக்கன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் திரு.பால சுப்ரமணியன் மற்றும் சாமிநத்தம் பஞ்சாயத்தை சேர்ந்த திரு. நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப் பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்குவது என திட்டமிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மேலும் தமிழ்நாட்டில் முதன் முறையாக ஐந்திணைப்பூங்கா (குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்படவுள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் டை-மெத்தில்-சல்பைடு என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை நடுதல் முதற்கட்ட திட்டமாகும்.


அடுத்தகட்டமாக மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த உள்ளது. மேலும் சரணவன் அவர்கள், ஆலை ஊழியர்களிடம் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.சுமதி பேசுகையில், ’’இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும் என்றும், இந்த ஆலை ஆரம்பித்த நாள் முதல் திருவைகுண்டம் பகுதிகளில் காலவாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும் சேவை செய்துவருகிறது’’ என்று குறிப்பிட்டார்.


பசுமை தூத்துக்குடி என்ற இடம் 2019 ஆம் ஆண்டு 10 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தை முன்னெடுத்து 1.25 இலட்சத்தை அடைந்துள்ளது. இந்த பத்து லட்சம் மரத்தை 4000 ஏக்கர் நிலத்தில் நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14.0 சதவீதமாக வளர்ச்சி அடையும். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனமானது தூத்துக்குடியில் உள்ள 403 கிராம பஞ்சாயத்துகளில் 35% காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் பஞ்சாயத்து அமைப்புகள் கீழ்கண்ட அலைபேசி எண்ணிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News