வேதாரணயத்தில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி! கொடியசைத்து துவக்கி வைத்த டி.எஸ்.பி!
வேதாரணயத்தில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி! கொடியசைத்து துவக்கி வைத்த டி.எஸ்.பி!
By : Kathir Webdesk
நாகை மாவட்டம், வேதாரணயத்தில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு பெண் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தினர்.
நாகை மாவட்டம், வேதாரணயத்தில் காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் இணைந்து 32-வது சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு பெண் காவலர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு பாதகைகள் அடங்கிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
வேதாரணயத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகாதேவன் கொடியசைத்து துவக்கி வைத்தார். அவருடன் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பொதுமக்கள் வேதாரண்யம் நான்கு வீதிகளின் வழியாகச் சென்று சாலை பாதுகாப்பு குறித்தும் விபத்தில்லா பயணங்கள் குறித்தும், தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.
இந்த பேரணி வழிப்புணர்வு மூலமாக அனைத்து வாகன ஓட்டிகளும் தலைகவசம் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி விபத்தில்லா மாநிலமாக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.