Kathir News
Begin typing your search above and press return to search.

புதுக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் 35 லேப்டாப்கள் கொள்ளை.!

வேதியியல் ஆய்வக அறையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த விலையில்லா லேப்டாப்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை அருகே அரசுப்பள்ளியில் 35 லேப்டாப்கள் கொள்ளை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  24 Jun 2021 4:13 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்துள்ள சுப்பிரமணியபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் வேதியியல் ஆய்வக அறையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த விலையில்லா லேப்டாப்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 9ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இதனிடையே நடப்பு கல்வி ஆண்டுக்காக மாணவர்களுக்கு புத்தகள் வழங்கும் பணிக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி பள்ளியின் தலைமை ஆசிரியர் மலைச்சாமி பள்ளியை திறந்துள்ளார்.





இதன் பின்னர் ஒவ்வொரு அறையாக சோதனை மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்காக கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 35 லேப்டாப்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து குறித்து நாகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து எஸ்.ஐ. பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News