Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூர்: 35 மயில்களை விஷம் வைத்துக்கொன்ற விவசாயி.!

திருப்பூர் அருகே தோட்டத்தில் நுழைந்த 35 மயில்களை விஷம் வைத்துக்கொன்ற விவசாயி.

திருப்பூர்: 35 மயில்களை விஷம் வைத்துக்கொன்ற விவசாயி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  12 July 2021 3:08 PM IST

திருப்பூர் அருகே தோட்டத்தில் நுழைந்த 35 மயில்களை விஷம் வைத்துக்கொன்ற விவசாயி.

திருப்பூர் மாவட்டம், பொல்லிகாளிபாளையத்தில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கடந்த 9ம் தேதி 24 மயில்கள் இறந்து கிடந்துள்ளது. இது பற்றி விசாரணைக் குழு நடத்தி வந்த விசாரணையில், தற்போது மீண்டும் அதே இடத்தில் 10 மயில்கள் இறந்து கிடந்துள்ளது. மொத்தம் 35 மயில்கள் இறந்து போனதை தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு இறந்துபோன மயில்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதன் உடல்களை அங்கேயே எரிக்கப்பட்டது.


இதனிடையே குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் நபரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தோட்டத்தில் அதிக அளவில் மயில்கள் வருவதால், விதைகள் அனைத்தும் சாப்பிட்டுவிட்டு சென்று விடுவதால் தனக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால்தான் மயில்கள் சாப்பிடும் உணவுப்பொருளில் விஷம் வைத்து கொன்றேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய பறவையான மயிலை விஷம் வைத்து கொன்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News