தமிழகத்திற்கு இன்று 4.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழங்கும் மத்திய அரசு.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தட்டுப்பாடின்றி மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு பல லட்சம் தடுப்பூசிகளை வீணடித்துள்ளது.
By : Thangavelu

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு 4.20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் என தெரிவித்துள்ளது. விமானம் மூலமாக சென்வை வரும் தடுப்பூசிகள் இன்று இரவு அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகிறார். ஆனால் திமுக போன்ற ஆளும் கட்சிகள் வேண்டும் என்றே மத்திய அரசு மீது வீண் பழி சுமத்தி வருகிறது. ஆனால் பொதுமக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.