சென்னை ஐஐடி வளாகத்தில் மான்கள் உயிரிழப்புக்கு ஆந்த்ராக்ஸ் நோய் காரணமல்ல!
By : Thangavelu
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழந்தது. இந்த சம்பவத்தால் அங்கு படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சத்தில் மூழ்கியிருந்தனர்.
இதற்கிடையில் மான்கள் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் கல்லூரி வளாகத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து மான்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வனவிலங்கு மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளும், இது போன்று அறிவிக்கக்கூடிய நோய்களுக்கான நெறிமுறைகளை ஐஐடி நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நாங்கள் பின்பற்றியுள்ளோம். மேலும், மற்ற வனவிலங்குகளை கண்காணிக்க 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில், ஐஐடி வளாகத்தில் உயிரிழந்த மான்கள் ஆந்த்ராக்ஸ் நோயினால் உயிரிழக்கவில்லை என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. யாரும் அச்சப்படத்தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: Twiter