Top
Kathir News
Begin typing your search above and press return to search.

திண்டிவனம் அருகே கார் விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.!

திண்டிவனம் அருகே கார் விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.!

திண்டிவனம் அருகே கார் விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Feb 2021 4:34 PM GMT

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில், பெண் வேளாண் அலுவலர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் செந்தில்நாதன், இவரது மனைவி வேளாண் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முகில் மற்றும் குருநாதன் ஆகியோருடன் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றக சென்றுள்ளனர். இதன் பின்னர் 4 பேரும் மாருதி சுசூகி பலீனோ காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கார் திண்டிவனம் அடுத்துள்ள பாதிரி என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரை ஓட்டி வந்த செந்தில்நாதன் தூக்க கலக்கத்தில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story