Kathir News
Begin typing your search above and press return to search.

பாஸ் மார்க் எடுத்தும் ஃபெயில் என தேர்வு முடிவு.. பள்ளிக்கல்வித்துறை அலட்சியத்தால் தவிக்கும் மாணவி!

பாஸ் மார்க் எடுத்திருந்த பள்ளி கல்வித்துறை அலட்சியத்தினால் பரிதவிக்கும் மாணவி.

பாஸ் மார்க் எடுத்தும் ஃபெயில் என தேர்வு முடிவு.. பள்ளிக்கல்வித்துறை அலட்சியத்தால் தவிக்கும் மாணவி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  11 May 2023 4:08 AM GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்ற பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி என்பவர். இவர் 2021 ஆம் ஆண்டு திருநகரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தற்பொழுது அவர் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணி சுவாமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு தனித் தேர்வாளராக எழுதி தேர்வு முடிவிற்காக காத்து இருந்தார் நேற்று முன்தினம் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது, ஆனால் இவருடைய ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


ஆர்த்தி தேர்வு முடிவை ஆன்லைனில் பார்த்து இருந்தால், அதில் தமிழில் நூற்றுக்கு 138 மதிப்பெண் என்று பட்டியலில் அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் மதிப்பெண் பட்டியலில் ஆங்கிலத்தில் 92 மதிப்பெண்களும், கணிதத்தில் 56, இயற்பியலில் 75 மதிப்பெண்களும், வேதிகளில் 71 மதிப்பெண்களும், உயிரியலில் 82 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தால் மொத்தம் இவருடைய மதிப்பெண்கள் 600க்கு 514 என்று குறிப்பிடப்பட்ட இருந்தது. ஆனால் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என நான்கு பாடங்களில் அவர் தேர்ச்சி பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டு தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது.


இது மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழில் 100 மதிப்பெண்களுக்கு 138 மதிப்பெண்கள் இடம் பெற்று இருப்பது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த ஒரு அலட்சிய செயல் காரணமாக மாணவி தற்போது தனக்கு ஏற்பட்டுள்ள குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

Input &Image courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News