மின்சாரம் இல்லாமல் இருளில் தவிர்க்கும் 40 குடும்பங்கள்: மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்?
திருவெண்ணைநல்லூர் அருகே மின்சாரம் இல்லாமல் இருளில் 40 குடும்பங்கள் கடந்து பத்து ஆண்டுகளாக தவிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
By : Bharathi Latha
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் ஒன்றியம் அருகில் அமைந்துள்ளது தான் ஆனத்தூர் என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அங்கன்வாடி தெரு மற்றும் நியாயவிலை கடை எதிரில் சுமார் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்களுக்கு சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் இருளில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த பகுதியில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலே மின்சாரம் இல்லாமல் இருக்கிறது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்க முடியாமல்- வருகிறார்கள். மழைக்காலங்களில் இரவுகளில் விஷ பூச்சிகளும் அதிக அளவில் இருந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கின்றது. இது தொடர்பாக பல்வேறு மனுக்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் இரவில் மண்ணெண்ணெய் விளக்கில் குடும்பம் நடத்தி வருவதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்து இருக்கிறார்கள். இது குறித்து மின்சார அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் 40 குடும்ப மக்களின் இருளைப் போக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தற்பொழுது கோரிக்கை முன்வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: