Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்டோர் பா.ஜ.கவில் இணைந்தனர் - அண்ணாமலை அறிவிப்பால் நடந்த மாற்றம்!

மாற்றுக் கட்சியில் இருந்து நவம்பர் ஒன்றாம் தேதி சுமார் 4000 க்கும் மேற்பட்ட நபர்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளதாக தகவல்.

ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்டோர் பா.ஜ.கவில் இணைந்தனர் - அண்ணாமலை அறிவிப்பால் நடந்த மாற்றம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Nov 2022 1:35 PM GMT

பா.ஜ.கவில் 4,000க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சிகளில் இருந்து இணைந்தார்கள்:

இனிமேல் வருகின்ற மாதங்களில் ஒன்றாம் தேதி அன்று மாற்றுக் கட்சியில் இருந்த பா.ஜ.கவில் இணைய விரும்புபவர்கள் சென்னை கமலாலயத்தில் நேரடியாக வந்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளலாம் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக நவம்பர் ஒன்றாம் தேதி அதாவது இந்த அறிவிப்பு வழியாகிய முதல் மாதத்தில் சுமார் 4000 க்கும் மேற்பட்ட நபர்கள் தற்பொழுது பா.ஜ.கவில் இணைந்து இருக்கிறார்கள்.


பா.ஜ.கவிற்கு பெருகும் ஆதரவு:

நவம்பர் 1-ஆம் தேதி நடைபெற்று இணைப்பு நிகழ்வில் கிட்டத்தட்ட 4,000-க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர். இதில் பெரும்பாலனவர்கள் ஆளும் தி.மு.க-வை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல். நவம்பர் முதலாம் தேதி அன்று தி.மு.கவினரை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் உரையாற்றினார். கொட்டும் மழையிலும் மகளிர் அணி சார்பில் அவர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை அவர்கள் தி.மு.கவினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.



காலங்களும் மாறும், காட்சிகளும் மாறும்:

இதன் காரணமாகவே சினம் கொண்ட முதல்வரும், மூத்த அமைச்சர்களும் செய்வதறியாது தவித்து, மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை கைது செய்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. எது எப்படியோ தமிழகம் தற்பொழுது பா.ஜ.க-வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் கண்க்கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம். காலங்கள் மாறும், காட்சிகளும் மாறும் என்று பா.ஜ.க மாநில செயலாளர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

Input & Image courtesy: Twitter Source

Next Story
கதிர் தொகுப்பு
Trending News