475 வந்தே பாரத் அதிவேக ரயில்கள் - அடுத்த நான்கு ஆண்டுகளில் தயாரிக்க முடிவு!
475 வந்தே பாரத அதிநவீன ரயில்கள் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் தயாரிக்க முடிவு.
By : Bharathi Latha
அடுத்த நான்கு ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கும் வகையில் இதுபோன்ற 475 ரயில்களை இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலின் புதிய முன்மாதிரியை ஐசிஎஃப் சென்னையில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 475 வந்தே பாரத் அரை-அதிவேக விரைவு ரயில்கள் தயாரிக்கப்படும் என்று கூறினார். இதுபோன்ற 75 ரயில்கள் 2023 ஆகஸ்ட் 15 க்கு முன் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
பல தடைகளைத் தாண்டி, மேம்பட்ட முடுக்கம் மற்றும் வசதியான பயணத்துடன் மூன்றாவது வந்தே பாரத் ரயில் இறுதியாக விரைவில் பாதையில் வர உள்ளது. தற்பொழுது, புது தில்லி-வாரணாசி மற்றும் புது தில்லி-கத்ரா நிலையங்களுக்கு இடையே இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவில் இன்று இந்தியா முழுவதும் வந்தே பாரத் மிஷின் மூலமாக அதில் அதி நவீன ரயில்களை இயக்குவது மத்திய அரசு முக்கிய முயற்சியாக இருந்து கொண்டு வருகிறது.
உலகத் தரம் வாய்ந்த ரயில் 2018 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டது. வந்தே பாரத் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலை (ஐசிஎஃப்) மூலம் 18 மாதங்களில் வடிவமைப்பிலிருந்து மேம்பாடு வரை கட்டப்பட்டது. 2022-23 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
Input & image courtesy: Swarajya News