திண்டுக்கல் அருகே அணையில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு.!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் காமராஜர் அணை உள்ளது. விடுமுறை தினம் என்றால் இந்த அணைக்கு நிறைய பேர் செல்வது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் காமராஜர் அணை உள்ளது. விடுமுறை தினம் என்றால் இந்த அணைக்கு நிறைய பேர் செல்வது வழக்கம்.
அதே போன்று இன்று ஆத்தூர் பகுதியை சேர்ந்த நண்பர்களான நாகராஜ், லோகு, செல்வபரணி, பரத், சாரதி பிரபாகரன் ஆகிய 5 சிறுவனர்கள் அணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது 5 சிறுவர்களும் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளித்துள்ளனர். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சிறுவர்கள் கூச்சலிட்டனர்.
இதனை கவனித்த மற்றவர்கள் சிறுவர்களை காப்பாற்று முயற்சி செய்தனர். ஆனால் சிறுவர்கள் ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். இதன் பின்னர் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நண்பர்கள் 5 பேரும் ஒரே நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.