Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்துக்கு வந்தடைந்த 5 லட்சம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசிகள்.!

விமான நிலையத்தில் இருந்து சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மைத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அனைத்தும் மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு வந்தடைந்த 5 லட்சம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசிகள்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  11 July 2021 8:05 AM IST

தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்குவதற்காக புனேவில் இருந்து 5 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இதனால் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்துக்கு புனேவில் இருந்து சென்னைக்கு 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளது.

விமான நிலையத்தில் இருந்து சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மைத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இவை அனைத்தும் மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News