50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சாமி சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! மீட்கப்படுமா?
By : Dhivakar
திருவாரூர்: 3 பழங்காலத்து சாமி சிலைகள் அமெரிக்காவிலுள்ள அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்து கோயில் சாமி சிலைகள் காணாமல் போவதும், அதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் வெளிநாட்டிலிருந்து மீட்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது. அதன் வரிசையில்,
2017'ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகாவிற்கு உட்பட்ட வேணுகோபால சுவாமி கோவிலுக்குச் சொந்தமான மூன்று பழங்காலத்து சாமி சிலைகள், 50 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக புகார் எழுந்தது.
இதனை அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்சில், புகழ்பெற்ற அருங்காட்சியத்தில் அம்மூன்று பழங்காலத்து சிலைகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். சிலைகளின் உரிமையை நிரூபிக்கும் ஆவனங்களை அரிசிடம் ஒப்படைத்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படும் என்ற செய்தி தெரிந்தவுடன், வேணுகோபாலசுவாமி கோயில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.