500 கோடி கைமாறல்! சர்வதேச போதைபொருள் கடந்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட நவாஸ், முகம்மது அஃபனாஸ்!
500 கோடி கைமாறல்! சர்வதேச போதைபொருள் கடந்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட நவாஸ், முகம்மது அஃபனாஸ்!
By : Muruganandham M
சர்வதேச அளவில் ஹொராயின் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட இலங்கையை சேர்ந்த இரண்டு பேர் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இலங்கை மற்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு ஹெராயினைக் கடத்த முயற்சி செய்த போது பிடிபட்டது. அவர்களிடமிருந்து ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின், 18 கிலோ மெத்தாம் பெட்டமைன் பிடிபட்டது. ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காஜா மைதீன், சென்னையைச் சேர்ந்த காதர்மைதீன் ஆகிய இருவரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நவாஸ், முகம்மது அஃபனாஸ் என்ற இருவரும் தான் பாகிஸ்தான் நாட்டின் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குத் திட்டம் வகுத்துக்கொடுத்து, மூளையாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும், பாஸ்போர்ட் இல்லாமல், சென்னையில் பத்து ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவர்களில்,நவாசை பிடிக்க, இண்டர்போல் உதவியை நாடியுள்ள இலங்கை அரசு ஏற்கெனவே ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் ஒன்று இயக்குவதையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தற்போது கண்டறிந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளுடன் தொடர்புடைய சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் அதன் மையப்புள்ளியாக தமிழகத்தை தேர்வு செய்து கடத்தல் சம்பவங்களை அரங்கேற்றி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.