10.5 சதவீதம் இடஒதுக்கீட்டால் தமிழகத்தில் 500 மருத்துவ இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்படலாம்.!
தமிழகத்தில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3650 இடங்கள் மற்றும் 14 தனியார் கல்லூரிகளில் 1052 இடங்கள் உள்ளது.

By : Thangavelu
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் வன்னியர்களுக்கு அளிக்கப்பட இடஒதுக்கீடு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது
இந்நிலையில், தமிழகத்தில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3650 இடங்கள் மற்றும் 14 தனியார் கல்லூரிகளில் 1052 இடங்கள் உள்ளது.
இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் சுமார் 1000 இடங்கள் ஒதுக்கப்படும். அதில் 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டாக 500 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டால் கூடுதலாக 150 இடங்கள் ஒதுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
