Kathir News
Begin typing your search above and press return to search.

அசத்தல் அறிவிப்பு : தமிழகத்தில் 59 அணைகள் புனரமைக்க திட்டம்.!

அசத்தல் அறிவிப்பு : தமிழகத்தில் 59 அணைகள் புனரமைக்க திட்டம்.!

அசத்தல் அறிவிப்பு : தமிழகத்தில் 59 அணைகள் புனரமைக்க திட்டம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Oct 2020 9:35 AM GMT

மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 59 அணைகள் உட்பட 736 அணைகள் புனரமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி, ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன், அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2ம் மற்றும் 3ம் கட்ட பணிகளை மேற்கொள்ள பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது

இதன்படி தமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு ரூ.10,211 கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2031-க்குள் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சணல் சாக்குகளில் பொருட்களை அனுப்புவதற்கான விதிமுறைகளை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 100 சதவீத உணவு தானியங்கள் மற்றும் 20% சர்க்கரை ஆகியவை சணல் சாக்குகளில் நிரப்பப்பட்டு அனுப்புவது கட்டாயமாக்கப்படும். இந்த முடிவு சணல் தொழிலை ஊக்குவிக்கும். நாடு முழுவதும், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 3.7 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சணல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தாண்டு கரும்பு அறுவடை காலம் மற்றும் எத்தனால் விநியோக ஆண்டு 2020-21-ல், எத்தனால் விலையை நிர்ணயம் செய்வது மற்றும் எத்தனால் கொள்முதல் செய்ய ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. எத்தனால் விலை ரகத்திற்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.62.65 வரை அதிகரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News