Begin typing your search above and press return to search.
6 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா ஒட்டிய கடல் பகுதியில் நிலவி வருகிறது. தென்மேற்கு பருவக் காற்று காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரியில் ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
Next Story