Kathir News
Begin typing your search above and press return to search.

6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தது.!

தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.

6 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தது.!
X

ThangaveluBy : Thangavelu

  |  15 May 2021 2:43 PM IST

தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வருகிறது.

தமிழகத்தில் நோய் தொற்று கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் சூழலில், தடுப்பூசி போடும் பணியானது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே நோயிலிருந்து விடுபட முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு கூடுதலான தடுப்பூசி மருந்துகளை 6 லட்சம் டோஸ் மருந்துகளை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளது. புனேவில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு வந்துள்ளது. 6 லட்சம் டோஸ் மருந்துகள் சுமார் 50 பார்சல்களில் வந்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறையினர் சென்னை விமான நிலையத்தில் சென்று தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்டு, வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ கிடங்கிற்கு பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News