மழை நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்த 600 ஆடுகள்.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!
மழை நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்த 600 ஆடுகள்.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விவசாயிகளின் 600க்கும் மேற்பட்ட ஆடுகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் கருத்தாப்பிள்ளை மற்றும் பழனி, அஞ்சலை ஆகியோர்கள் ஆட்டுப்பண்ணை மூலமாக பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சங்கராபுரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாகவும், நேற்றைய தினம் அதிகப்படியாக சங்கராபுரம் பகுதியில் மழை பொழிவு பதிவாகியிருந்தது.
நேற்று பெய்த கனமழையால் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளது. இந்த ஆடுகள் அந்த பகுதியில் இருந்த ஓடைகள் வழியாக அடித்துசெல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆடுகளை விவசாயிகள் சென்று பார்வையிட்ட போது அனைத்தும் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த விவசாயிகள் கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சங்கராபுரம் பகுதி மட்டுமின்றி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.