Kathir News
Begin typing your search above and press return to search.

கடந்த 2 மாதங்களில் தமிழகதத்தில் கோவில் திருவிழாக்களில் நடந்த அசம்பாவிதங்கள் - யாருக்கு ஆபத்து?

கடந்த 2 மாதங்களில் தமிழகதத்தில் கோவில் திருவிழாக்களில் நடந்த அசம்பாவிதங்கள் - யாருக்கு ஆபத்து?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 April 2022 8:54 PM IST

கடந்த 2 மாதங்களில் நடந்த ஏழு கோவில் விபத்துகளில் ஆறு விபத்துகளில் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றாலும், தஞ்சாவூரில் நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்ச் 7- கள்ளக்குறிச்சி எலவனாசூர்கோட்டை கோயில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது . இதில் தேரில் அமர்ந்திருந்த பூசாரிக்கு காயம் ஏற்பட்டது . உயிரிழப்பு எதுவும் இல்லை.

மார்ச் 10 - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அடுத்த ஊஸ்கூரில் 120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை.

மார்ச் 12 - கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பழனியூரில் மாகாளியம்மன் கோயில் தேர் சாலையோர கால்வாயில் இறங்கியதில் விபத்து ஏற்பட்டது . இந்த விபத்திலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

மார்ச் 22 - மதுரை திருப்பரங்குன்றம் கோயில் தேரோட்டத்தில் தேர் மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது . அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் எதுவும் இல்லை.

ஏப்ரல் 20 - கள்ளக்குறிச்சியில் கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழா தேரோட்டத்தின்போது வீட்டின் பால்கனி இடிந்து 10 பேர் காயமடைந்தார்கள்.

ஏப்ரல் 26 - நாமக்கல் மாவட்டம் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தின்போது மின்கம்பியில் உரசி தீ விபத்து ஏற்பட்டது. பழுது நீக்க சென்ற மின்வாரிய ஊழியர் காயம் அடைந்தார். உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

ஏப்ரல் 27 - தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





Next Story
கதிர் தொகுப்பு
Trending News