தமிழ்நாடு: மூன்று சுற்று முடிவிலும் காலியாக இருக்கும் 75 சதவீத பொறியியல் சேர்க்கைக்கான இடங்கள்.!
தமிழ்நாடு: மூன்று சுற்று முடிவிலும் காலியாக இருக்கும் 75 சதவீத பொறியியல் சேர்க்கைக்கான இடங்கள்.!
By : Kathir Webdesk
இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான இணைய வழி கவுன்செல்லிங் மூன்று சுற்றுகள் முடிந்த நிலையில் தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான 2020க்கு ஆன சேர்க்கை இடங்களில் நான்கில் மூன்று இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு 458 கல்லூரியில் உள்ள 1,61,877 சேர்க்கை இடங்களில் மூன்றாம் கட்ட சுற்று முடிவிலும் மொத்தம் 42,421 இடங்களே நிரப்பப்பட்டுள்ளன.
பொறியியல் கவுன்செல்லிங்காக மூன்று கட்டங்களிலும் பதிவு செய்த மாணவர்களில் சுமார் 40 சதவீதம் பேரில் அதில் பங்கேற்கவில்லை. நான்காம் சுற்றுக்குப் பிறகு நடத்தப்படும். துணை கவுன்செல்லிங்கில் இந்த மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். 2019 இல் பொறியியல் கவுன்செல்லிங் முடிவில் பாதிக்கும் மேல் இடங்கள் காலியாக இருந்தன. ஆனால் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.
நான்காம் கட்ட சுற்றுகளில் பங்குபெறும் மாணவர்களின் எண்ணிக்கை 40,572 ஆக உள்ளது, அதில் 24,500 மாணவர்கள் தற்காலிக சேர்க்கையில் இடம்பெறுவர். இதன்மூலம் இறுதிக்கட்ட சுற்று முடிவில் மொத்த இடங்களில் 41.4 சதவீதம் இடம்பிடித்து மொத்தம் 67,000 இடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் மேலாண்மை ஒதுக்கீடு இடங்களில் மொத்தம் 2.64 லட்ச BE மற்றும் B-Tech இடங்கள் இடம்பெறுகின்றன.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விண்ணப்பங்களில் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து, 1.33 லட்சத்திலிருந்து 1.6 ஆக உயர்ந்தாலும் கவுன்செல்லிங் பங்கேற்பாளர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வேலைவாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கை குறைந்துள்ளதால் இந்த எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்று பொறியியல் கல்லூரியின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலையைப் பெறுகின்றனர் என்று சென்னை பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் துறை பேராசிரியர் தெரிவித்தார். "சில மாணவர்கள் கால் சென்டர்களிலும் மற்றும் சாப்ட்வேர் கம்பனியிலும் 10,000 முதல் 15.000 சம்பளத்துக்கு வேலை செய்கின்றனர். அதிகபட்சமாக மாணவர்கள் ஆண்டிற்கு 3.2 லட்ச சம்பளம் கிடைக்கின்றது," என்றும் அவர் தெரிவித்தார்.
இது தவிர, தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை(ICT) சம்மந்தப்பட்ட துறையில் சேர 2018 இல் இருந்தே ஆர்வங்கள் நிலையாக உள்ளது. இதுவரை சேர்க்கையில் இடம்பெற்ற மாணவர்களில் கால்வாசி பேர் கணினி அறிவியல் துறையைத் தேர்வு செய்துள்ளனர். அதில் பாதிப்பேர் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அல்லது தகவல் பொறியியல் துறைகளைத் தேர்வு செய்துள்ளனர்.