7.5 சதவீத உள்ஒதுக்கீடு.. மருத்துவ கனவு நனவாகியது.. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாணவ, மாணவிகள்.!
7.5 சதவீத உள்ஒதுக்கீடு.. மருத்துவ கனவு நனவாகியது.. அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாணவ, மாணவிகள்.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த ஏழை, மாணவ, மாணவிகள் அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கிட்டப்பா குட்டை பகுதியில் வசித்து வருபவர் மகிமை தாஸ், இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறது. இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. இவரின் 2வது மகள் ஸ்வேதாவுக்கு, தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டில், தருமபுரி மருத்துவ கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குடும்பத்துடன் கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்துள்ளனர்.
அதே போன்று தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கிராமத்தை சேர்ந்த தையல் தொழிலாளி கணேசனின் 2வது மகள் சகானாவுக்கு மருத்துவ இடம் திருச்சியில் கிடைத்துள்ளது. அவரும் தனது குடும்பத்தினருடன் அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மற்றொரு மாணவியான ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவுத் தொழிலாளி ராஜசேகர் என்பவரது மகள் சம்சிகாவுக்கு மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்துள்ளதால் அவரும் தனது குடும்பத்தினருடன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அவரை போன்று தமிழகத்தில் மருத்துவ இடம் கிடைத்த அரசு பள்ளி, மாணவ, மாணவியர்கள் அரசுக்கு தொடர்ந்து நன்றியை தெரிவித்து வருகின்றனர்.