Kathir News
Begin typing your search above and press return to search.

7.5 சதவீத இடஒதுக்கீடு: தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.!

7.5 சதவீத இடஒதுக்கீடு: தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.!

7.5 சதவீத இடஒதுக்கீடு: தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Dec 2020 2:51 PM GMT

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தனியார் கல்லூரிகளில் மருத்துவ இடத்தை பெரும் மாணவர்கள் பலர் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். அதற்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


இந்நிலையில், சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி மற்றும் இலக்கியா ஆகியோருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் அவர்கள் தேர்வு செய்யவில்லை. தற்போது கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்திருப்பதால் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என மாணவிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் அதனை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் மருத்துவ சீட் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு உறுதியளித்தது. உள் ஒதுக்கீடு மூலமாக கிராமப்புறத்தில் படிக்கின்ற அரசுப்பள்ளி மாணவர்களும் இனிமேல் மருத்துவராக வருகின்ற நிலைமை உருவாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News