விதிமீறல்கள்: தமிழகத்தில் 84 பட்டாசு ஆலைகள் மூட உத்தரவு.!
84 crackers factory close

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவிலான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. அங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படும். அது மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது.
அது போன்று இயங்கும் பட்டாசு ஆலைகளில் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் தீடீரென்று விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்டோர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், விபத்துக்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 84 பட்டாசு ஆலைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது உரிய பாதுகாப்பு வசதி இல்லாதததை கண்டுப்பிடித்துள்ளனர். அதாவது தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் இல்லை. தரையில் பட்டாசுகளை காய வைப்பது போன்ற விதிமீறல்களைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அத்தகைய 84 பட்டாசு ஆலைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தால் மட்டுமே பட்டாசு ஆலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.