Kathir News
Begin typing your search above and press return to search.

850 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயிலில், சண்டிகேஸ்வரர் சுவாமி சிலை திருட்டு !

850 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன்  கோயிலில், சண்டிகேஸ்வரர் சுவாமி சிலை திருட்டு !

DhivakarBy : Dhivakar

  |  27 Nov 2021 11:19 AM GMT

திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அருகில் இருக்கும் பிரசத்திப்பெற்ற பழமையான சிவன் கோயிலில் சாமி சிலைகள் திருட்டுபோய்வுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் கோயில் சாமி சிலைகள் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி அருகில் இருக்கும் பழையபாளையத்தில், பிரசத்திப்பெற்ற 850 ஆண்டுகள் பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், முன் விக்கிரம பாண்டிய மன்னனால் எழுப்பப்பட்டது.

அக்கோவில் அர்ச்சகர் கார்த்திகேயன், 22ஆம் தேதியன்று வழக்கமான பூஜைகள் முடித்துவிட்டு, கோவிலை பூட்டி விட்டு, வீடு திரும்பியுள்ளார், பின்னர் அடுத்த நாள் காலையில் மீண்டும் அவர் கோவிலுக்கு சென்ற போது, கோவிலுக்கு வெளியே பிரதிஷ்டை செய்திருந்த மூன்று அடி உயர சண்டிகேஸ்வரர் சுவாமி சிலை காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.

சாமி சிலைகள் திருடப்பட்டதை, துவரங்குறிச்சி போலிசாருக்கு புகார் அளித்தார் அர்ச்சகர் கார்த்திகேயன். பின்னர் சம்பவ இடம் சென்று போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்

தொடர்ச்சியாக சாமி சிலைகள் தாக்கபடுவதும், திருடப்படுவதும் தமிழகத்தில் வழக்கம் ஆகி வருகிறது.

Dinamalar

Image : Zee News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News