9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!
கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
By : Thangavelu
கடந்த அதிமுக ஆட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது என்பது பற்றி மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய 2 நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ம் தேதி நடைபெறும். தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுத்தாக்கம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ளது. பரிசீலனை செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.
Source, Image Courtesy: Puthiyathalamurai