எம்.எல்.ஏ.க்களாக 9 பேர் பதவியேற்பு: சபாநாயகர், முதலமைச்சர் பங்கேற்பு.!
தமிழகத்தில் கடந்த 11ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க முடியாத நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
By : Thangavelu
தமிழகத்தில் கடந்த 11ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்க முடியாத நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதனிடையே புதிய சட்டன்ற உறுப்பினர்களாக அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்க முடியாத 9 பேர் இன்று (மே 24) பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் பதவியேற்று கொண்டனர். அதே போன்று திமுக சார்பில் சிவசங்கர், மதி வேந்தன், காந்திராஜன், வரலட்சுமி, வெங்கடாச்சலம் பதவியேற்றுக் கொண்டனர்.