9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!
9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு.!
By : Kathir Webdesk
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பள்ளிக்கு சரியாக சென்று பாடங்களை படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் ஆல் பாஸ் அடைவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டபோது 1 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரையும் தேர்ச்சி அடைவார்கள் என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார். அதே போன்று இந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் மட்டுமே ஆகிறது. இதனால் மாணவர்கள் போதுமான அளவு பாடங்களை படிக்க முடியாமல் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார்கள்.
இதனை கருத்தில் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று சட்டப்பேரவையில் அதிரடியான உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதலமைச்சர், கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வின்றி 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என அறிவித்தார்.