ஆவின் நிறுவனம் நலிவடைகிறதா.. லிஸ்ட் போட்டு குறைகளை கூறும் வாடிக்கையாளர்கள்?
ஆவின் பால் விற்பனை செய்வதில் தற்பொழுது தாமதம் ஏற்பட்டு இருப்பதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிப்பை அடைந்து இருக்கிறார்கள்.
By : Bharathi Latha
ஆவின் பால் முன்பை காட்டிலும் தற்பொழுது தங்களுக்கு தாமதமாக கிடைப்பதாக தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக சோளிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் சப்ளை செய்வது பெரும் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள். தமிழகத்தில் தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்ற ஒரு கோரிக்கையில் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இந்த போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் அளவு சற்றும் குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருவதன் காரணமாக தனியாரிடம் பால் வாங்க வேண்டிய ஒரு சூழலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஆவின் நிறுவனம் விரைவில் நலிவடைய வாய்ப்பு இருப்பதாகவும் பால் உற்பத்தியாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நேற்று சென்னை சோழிங்கநல்லூர் பால் பணியில் இருந்து பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால் வரத்து குறைந்ததன் காரணமாக உற்பத்தி மற்றும் அவற்றை விநியோகம் செய்வது கடும் அளவு பாதிப்பை அடைந்து இருக்கிறது. பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய விநியோக வாகனங்கள் காலதாமதம் சென்றதால் ஆவின் அட்டைதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து இருக்கிறார்கள். மேலும் பால் பாக்கெட் போதுமான அளவு தங்களுக்கு கிடைப்பது இல்லை என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News