Kathir News
Begin typing your search above and press return to search.

ஆவின் ஆர்டர் முறையை மாற்றியது: தனியார் பால் விற்பனைக்கு ஆதரவா?

ஆவின் நிறுவனம் அடுத்து நாட்களுக்கு தேவையான பால் ஆர்டர் முறையை மாற்றி இருக்கிறது.

ஆவின் ஆர்டர் முறையை மாற்றியது: தனியார் பால் விற்பனைக்கு ஆதரவா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Nov 2022 6:25 AM GMT

ஆவின் நிறுவனம் அடுத்த நாள் தேவையான பால் ஆர்டர் முறையை தற்போது மாற்று இருக்கிறது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தனியார் பால் விலையை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்று பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டு ஏழ படுகிறது. ஆவின் பால் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு மத்தியில் ஏழை மக்களுக்கு உதவிகரமாக குறைந்த விலையில் பால் கலை கொடுத்து வந்தது. ஆனால் தற்போது தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும் நோக்கத்துடன் விலை உயர்த்தப்பட்டு ஏழை மக்கள் பாதித்து இருக்கிறார்கள்.


மேலும் ஆவின் பால் விற்பனைக்கான முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மொத்தமாக ஒரு இடத்தில் பாலு இறக்கி விற்பனை செய்வார். மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் போன்று இடங்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவார்கள். பாலகங்கள் மூலமாக ஆவின் மண்டல அலுவலகங்கள் வாயிலாக நேரடியாக பால் பாக்கெட் சப்ளை செய்யப்படும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பால் பாக்கெட் தங்களுக்கு தேவைப்படும் என முகவர்கள் பாலகர்கள் நடத்துபவரிடம் இரவு 9 மணி வரை கேட்கப்படும். அவர்கள் கேட்கும் பாலில் அதிகாலை அல்லது பகல் நேரங்களில் வழங்கப்படும். ஆனால் சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்டது.. இதன் காரணமாக ஆவியின் விற்பனை குறைந்து தனியார் பால் விற்பனை அதிகரித்தது. இந்நிலையில் தனியார் பால் பாக்கெட் விற்பனை மேலும் அதிகரிக்கும் வகையிலான மறைமுக நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் செய்ய தொடங்கி இருக்கிறது.


அடுத்த நாள் பால் பாக்கெட் குறித்து முதல் நாள் மாலை 5 மணிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று முகவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென ஆவின் மண்டல அலுவலகங்கள் வாயிலாக சமூக வலைத்தளத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முந்தைய நாள் மாலை 5 மணிக்குள் வரும் ஆர்டர்கள் மட்டுமே பால் வழங்கப்படும். அதன்பின் கொடுக்கப்படும் ஆட்களுக்கு பால் வழங்கப்படாது என்று கூறப்பட்டது. இரவு எட்டு மணிக்கு பின் தான் அடுத்த நாள் பால் எவ்வளவு தேவை என்று விவரம் தெரிய வரும். இதனால் பண்டிகை வீடு, சுபம் முகூர்த்தம் போன்ற நாட்களில் அதிக பால் பாக்கெட் வாங்க விற்க முடியாத ஒரு சூழ்நிலையில் முகவர்கள் இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News